பாலக்கோடு அருகே குட்டையாக மாறிய சின்னாறு அணை


பாலக்கோடு அருகே குட்டையாக மாறிய சின்னாறு அணை
x

பாலக்கோடு அருகே குட்டையாக மாறிய சின்னாறு அணை

பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாறு அணை மூலம் 11 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 2 நாட்களுக்கு ஒரு முறை அணையில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் சின்னாறு மூலம் 4,500 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 
தர்மபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த அணை கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், தண்ணீர் இன்றி வறண்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும் இந்த அணையை நம்பி உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறி உள்ளன. பருவமழை தொடங்கினால் மட்டுமே சின்னாறு அணைக்கு தண்ணீர் வரும் என்பதால், விவசாயிகள் பருவழையை எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story