3-வது நாளாக தொப்பூர் பகுதி டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் கொரோனா பரவல் அச்சத்தில் கிராம மக்கள்


3-வது நாளாக தொப்பூர் பகுதி டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் கொரோனா பரவல் அச்சத்தில் கிராம மக்கள்
x
தினத்தந்தி 17 Jun 2021 5:39 AM IST (Updated: 17 Jun 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

3-வது நாளாக தொப்பூர் பகுதி டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் கொரோனா பரவல் அச்சத்தில் கிராம மக்கள்

நல்லம்பள்ளி:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையொட்டி தர்மபுரி உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.  தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சுற்று கிராமங்களான உம்மியம்பட்டி, சனிசந்தை, மானியதஅள்ளியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இங்கு அண்டை மாவட்டமான சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகளவில் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இந்தநிலையில் நேற்றும் 3-வது நாளாக ஏராளமான மதுப்பிரியர்கள் 3 கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். அவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்கள் வாங்கியதை காணமுடிந்தது. 
இதுகுறித்து சனிசந்தை, மானியதஅள்ளி, உம்மியம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இங்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், கொரோனா விதிகளையும் பின்பற்றுவதில்லை. இதனால் 3 கிராமங்களிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story