பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குலசேகரன். இவருடைய மகன் சுரேஷ் (வயது 19). கூலித்்தொழிலாளி. இந்தநிலையில் சுரேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பவத்தன்று சுரேசும், அந்த பெண்ணும் அங்குள்ள பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து அவமானம் அடைந்த சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
=======
Related Tags :
Next Story