ஊத்தங்கரை அருகே பெயிண்டர் தற்கொலை
ஊத்தங்கரை அருகே பெயிண்டர் தற்கொலை
கல்லாவி:
ஊத்தங்கரை அடுத்த அப்பிநாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெயிண்டர், சந்திரன் (வயது 30). இவரது மனைவி சரண்யா (25). இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். சந்திரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக குடிக்காமல் இருந்த சந்திரன் மீண்டும் குடித்துவிட்டு வந்ததால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த சந்திரன் கடந்த 14-ந் தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story