தேசிய செய்திகள்

டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; உற்சாக வரவேற்பு + "||" + TN CM MK Stalin Arrived at Delhi

டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; உற்சாக வரவேற்பு

டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்;  உற்சாக வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தற்போது முதல்கட்டமாக டெல்லியில் கட்டப்படும் திமுக அலுவலகத்தை முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிடுகிறார். அதன்பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்க்கு சென்று அங்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். 

அதன்பின்னர் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார். 

நீட் தேர்வு விவகாரம், ஜிஎஸ்டி நிலுவை தொகை, கொரோனா தடுப்பூசி, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் பிரதமரிடம் கோரிக்கையாக முன்வைக்க உள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் 6 மணியளவில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை முதல்- அமைச்சர் முக ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். 

இவை மட்டுமே அதிகாரப்பூர்வ பயணத்திட்டமாக உள்ள நிலையில் இதற்கு இடையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் சந்திக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

1. தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடம்: முதல்-அமைச்சர் திறந்து வைப்பு
தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
2. "தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!" - மு.க. ஸ்டாலின் டுவிட்
பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.
5. முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.