திருமருகலில் 3 கடைகளில் தீ; ரூ.10 ஆயிரம் பொருட்கள் சேதம்


திருமருகலில் 3 கடைகளில் தீ; ரூ.10 ஆயிரம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 17 Jun 2021 4:25 PM IST (Updated: 17 Jun 2021 4:25 PM IST)
t-max-icont-min-icon

திருமருகலில் 3 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகலில் வசிப்பவர் முத்து (வயது70). இவர் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் தேங்காய் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அருகே சீயாத்தமங்கை பகுதியை சேர்ந்த அழகர்சாமி (46) என்பவருக்கு சொந்தமான 2 இனிப்பு பலகார கடைகள் உள்ளன. 

இதில் ஒரு இனிப்பு கடையின் கூரையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. ஒரே நேரத்தில் தேங்காய் கடை மற்றும் 2 இனிப்பு கடைகள் என 3 கடைகளின் கூரைகளும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த திருமருகல் தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அதிகாரி திலக்பாபு தலைமையில் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் 3 கடைகளில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. கடைகளில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story