பூதலூர் ஒன்றியத்தில் 625 பேருக்கு கொரோனா தடுப்பூசி


பூதலூர் ஒன்றியத்தில் 625 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 17 Jun 2021 5:53 PM IST (Updated: 17 Jun 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

பூதலூர் ஒன்றியத்தில் 625 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி, 

பூதலூர் ஒன்றியத்தில் நேற்று பூதலூர் மற்றும் புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. பூதலூரில் 158 பேருக்கும், புதுப்பட்டியில் 152 பேருக்கும் பரிசோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூதலூரில் 144 பேருக்கும், புதுப்பட்டி 155 பேருக்கும், கோவிலடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 104 பேருக்கும், பாலையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 70 பேருக்கும், நவலூர் கிராமத்தில் 152 பேருக்கும் என மொத்தம் 625 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

முகாம்களில் டாக்டர் நவீன்குமார், ஆய்வக பரிசோதகர் ரஜினி, சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர்கள் ராமநாதன், தனபால், அன்பரசன் மற்றும் சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story