மண்ணெண்ணெய் குடித்து பள்ளி மாணவி தற்கொலை


மண்ணெண்ணெய் குடித்து பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2021 6:23 PM IST (Updated: 17 Jun 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி அருகே மண்ணெண்ணெய் குடித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் போலீஸ் சரகம் புன்னக்காயல் மறக்குடி தெருவை சேர்ந்தவர் அமலன். இவரது மனைவி ஜெபஸ்டா. அமலன் கப்பலில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஜெபின் ஷா (வயது 15) உள்ளிட்ட 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. ஜெபின்ஷா  சாகுபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளி நடைபெறாததால் அவர் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று ஜெபின்ஷா தலையில் தேய்ப்பதற்கு கற்றாழை ஜூஸ் எடுத்து வைத்துள்ளார். அது தவறி கீழே கொட்டியுள்ளது. இதனால் அவருக்கும், தங்கைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜெபின்ஷா கோபத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. 

இதை அறிந்த அவரது தாயார், ஜெபின்ஷாவை சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story