பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு தஞ்சை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். விசைப்படகு மீனவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வடுகநாதன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க செயலாளர் இப்ராகிம், பொருளாளர் எம்.எம்.பி.ஜலால், பாரம்பரிய மீனவர்கள் சங்க தலைவர் அப்துல் ரகுமான், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் சங்க செயலாளர் ரகுமத்துல்லா மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கட்டுமரத்தை தள்ளுவண்டியில் ஏற்றியும், தோளில் சுமந்தும் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story