வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்

வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்
x
தினத்தந்தி 17 Jun 2021 6:41 PM IST (Updated: 17 Jun 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயம்

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. விவசாயி. இவர் பசுமாடு வளர்த்து வருகிறார், தினமும் அங்குள்ள வனப்பகுதியையொட்டி மாடு மேய்த்து வந்தார். வழக்கம்போல நேற்றும் வனப்பகுதியையொட்டி  பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அந்தப்பகுதியில் மர்ம நபர்கள் யாரோ  வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர். அங்கு மேய்ந்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்தியின் பசுமாடு மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்துள்ளது. இதில் நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. குண்டு வெடித்ததில் பசுமாட்டின் வாய்ப்பகுதி சேதமடைந்து தொங்கியது. 
இதுகுறித்து உமராபாத் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story