அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
அடுக்கம்பாறை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி ராணிப்பேட்ட, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மேலும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன், கல்லூரி டீன் செல்வி, கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story