ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஆந்திராவுக்கு கடத்த முயன்ற  4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jun 2021 7:20 PM IST (Updated: 17 Jun 2021 7:20 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்டறம்பள்ளி

நாட்டறம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலத்துக்கு 4 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 4 டன் ரேஷன் அரிசி மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story