சென்னையில் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்


சென்னையில் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 17 Jun 2021 7:29 PM IST (Updated: 17 Jun 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நீர்நிலை, வடிகால் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணிகளுக்காக பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒப்பந்தங்களை பெற்ற ஒப்பந்ததாரர்கள் சிலர் உரிய நேரத்தில் பணியை தொடங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புனரமைப்பு பணிகளை உரிய காலத்தில் தொடங்காத 23 ஒப்பந்ததாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் பணிகளில் தொய்வு இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

Next Story