போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்


போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்
x
தினத்தந்தி 17 Jun 2021 8:13 PM IST (Updated: 17 Jun 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்

கோவை 

கோவை மேற்கு மண்டல பகுதியில் பணியாற்றும் போலீசார் 1000 பேருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. 

இதற்கான நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்சில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி.அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில், போலீஸ் ஐ.ஜி. சுதாகர் கலந்து கொண்டு போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து மற்ற போலீசாருக்கு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதனால் போலீசாருக்கு தொற்று ஏற்படாமல்  பாதுகாக்க வழி ஏற்பட்டு உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story