சாலைகளில் சுற்றித்திரிந்த 100 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை


சாலைகளில் சுற்றித்திரிந்த 100 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 17 Jun 2021 8:29 PM IST (Updated: 17 Jun 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

சாலைகளில் சுற்றித்திரிந்த 100 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

கோவை

கோவையில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த 100 பேருக்கு  கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வாகன சோதனை

கோவையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இதற்காக மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

அதில் குறிப்பாக ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி பலரும் வருவதால் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. 

இந்த நிலையில், கோவை பூ மார்க்கெட் சாலையில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை மாநகராட்சி ஊழியர்கள் 10 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அவர்கள், வாகன ஓட்டிகளின் பெயர் மற்றும் செல்போன் எண் விவரங்களை சேகரித்தனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் எதற்காக வெளியே வந்துள்ளீர்கள்? கொரோனா பரிசோதனை செய்துள்ளீர்களா?  சளி, காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து விசாரித்தனர்.

கொரோனா பரிசோதனை

இதில், அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களை அருகில் உள்ள சளி, காய்ச்சல் பரிசோதனை முகாமுக்கு அதிரடியாக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களிடம் சளிமாதிரி எடுக்கப்பட்டு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், கோவை பூ மார்க்கெட் சாலையில் அத்தியாவசிய தேவையின்றி வந்த 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் தொற்று கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் அங்கு நடைபெற்ற முகாமில் அந்த பகுதி பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர் என்றனர்.


Next Story