கொள்ளிடம் ஆற்றில், குடிபோதையில் இறந்து கிடந்த வாலிபர் - போலீசார் விசாரணை


கொள்ளிடம் ஆற்றில், குடிபோதையில் இறந்து கிடந்த வாலிபர் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Jun 2021 8:52 PM IST (Updated: 17 Jun 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில், குடிபோதையில் வாலிபர் இறந்து கிடந்தார். இதுக்குறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு, 

தஞ்சை கீழவாசல் கவாடிகாரத்தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது32). அதே தெருவை சேர்ந்த விமல்ராஜ் (32), பிரகாஷ் (42) மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று விளாங்குடிக்கு வந்தனர். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் முட்டளவு தண்ணீரில் நடந்து சென்று அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் மஞ்சமேடில் உள்ள மதுக்கடையில் மதுபாட்டில்களை வாங்கி குடித்தனர். பின்னர் 3 பேரும் விளாங்குடிக்கு கொள்ளிடம் ஆற்றில் நடந்து வந்து கொண்டிருந்தனர். 

அப்போது சதீஷ் ஆற்றின் கரையோரம் அமர்ந்துவிட்டார். விமல்ராஜ், பிரகாஷ் ஆகிய இருவரும் விளாங்குடிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு சதீசுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு வந்தனர். அப்போது சதீஷ் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சதீசை பரிசோதனை செய்தனர். 

அப்போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ் எப்படி இறந்தார்? என்று திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story