பாணாவரம் அருகே ஏரி மண் கடத்த முயன்ற லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
பாணாவரம் அருகே ஏரி மண் கடத்த முயன்ற லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து, பாணாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவேரிப்பாக்கம்,
பாணாவரத்தை அடுத்த தப்பூர் கிராமம் சித்தேரி பகுதியில் தாசில்தார் வெற்றிகுமார், வருவாய் ஆய்வாளர் சமரபுரி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், சுமன் ஆகியோர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சித்தேரி பகுதியில் சிலர் அரசு அனுமதியின்றி வாகனத்தில் ஏரி மண் அள்ளி கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி ஆகியவற்றை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து, பாணாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story