தனியார் குடியிருப்பு டிரான்ஸ்பார்மரில் தீ
கொடைக்கானலில் தனியார் குடியிருப்பு வளாகத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென்று தீப்பிடித்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. நேற்று பகலில் அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறிய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பிடித்தது.
உடனே இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் டிரான்ஸ்பார்மரில் பற்றிய தீைய தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story