திருப்பூரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் எஸ்.வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் எஸ்.வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
x
தினத்தந்தி 17 Jun 2021 10:05 PM IST (Updated: 17 Jun 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் எஸ்.வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர்:
திருப்பூரில் ரேஷன் கடைகளில் கலெக்டர் எஸ்.வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை மையத்தையும் அவர் பார்வையிட்டார்.
கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருவம்பாளையம், ஆலங்காடு கூட்டுறவு மொத்த விற்பனை ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதை திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் நேற்று காலை ஆய்வு செய்தார். பொது வினியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சர்க்கரை, அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள், மின்னணு எடை எந்திரங்களின் செயல்பாடு மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
கொரோனா சிகிச்சை மையம்
இதைத்தொடர்ந்து குமரன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சை முறைகள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உணவு முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
கொரோனா சிகிச்சை மையத்தின் வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story