பொங்கலூர் அருகே 2 கோவில்களில் மர்ம ஆசாமிகள் சாமி நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர்.
பொங்கலூர் அருகே 2 கோவில்களில் மர்ம ஆசாமிகள் சாமி நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர்.
பொங்கலூர்
பொங்கலூர் அருகே எஸ்.வேலாயுதம்பாளையத்தில் 2 கோவில்களில் புகுந்த மர்ம ஆசாமிகள் சாமி நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர்.
சாமி நகை கொள்ளை
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம், தெற்கு அவினாசி பாளையம் ஊராட்சி, எஸ்.வேலாயுதம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகிலேயே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் கருவறையின் கதவை உடைத்து மாரியம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் திருமாங்கல்யத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
பின்னர் அருகில் இருந்த காமாட்சி அம்மன் கோவில் கருவறையின் கதவை உடைத்து அங்கு சாமியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் திருமாங்கல்யத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். காலையில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஊர் பெரியோரிடம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணை
உடனடியாக இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே நகை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடுவாயில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரில் ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் கொடுவாய் அருகிலேயே மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story