கணவன்- மனைவி கைது


கணவன்- மனைவி கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 10:31 PM IST (Updated: 17 Jun 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே விவசாயியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

 திண்டுக்கல்: 

 திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 57). விவசாயி. இவருடைய தம்பி தனகரன் (42). இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கதுரை மற்றும் தனகரன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் தங்கத்துரை, தனகரன் உள்பட 8 பேர் மீது பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் சொத்து பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த தங்கத்துரை, கடந்த 15-ந்தேதி அளவுக்கு அதிக தூக்க மாத்திரைகளை தின்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தங்கத்துரை பரிதாபமாக இறந்தார்.

 இதையடுத்து தங்கத்துரையை தற்கொலைக்கு தூண்டியதாக தனகரன், அவருடைய மனைவி லதா ஆகியோர் மீது பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

Next Story