கிராமத்தை தனிமைப்படுத்திக்கொண்ட பொதுமக்கள்


கிராமத்தை தனிமைப்படுத்திக்கொண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jun 2021 10:34 PM IST (Updated: 17 Jun 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா அதிகரிப்பால் கிராமத்தை பொதுமக்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

குன்னூர்

குன்னூரில் இருந்து கொலக்கொம்பை செல்லும் சாலையில் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்பாரதி நகர் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 450 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. 

இதில், மேல்பாரதி நகரை சேர்ந்த 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் குன்னூர், ஊட்டி பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அறிவுரைபேரில், பொதுமக்கள் மேல்பாரதி நகரை தாங்களாகவே முன்வந்து கிராமத்தை தனிமைப்படுத்தி கொண்டனர். இதையடுத்து கிராமத்திற்குள் வரும் நுழைவு வாயில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டு, இது தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.  

தொடர்ந்து கிராத்திற்குள் வெளியாட்கள் வருவதற்கும், கிராமத்தில் வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வீதி, வீதியாக பிளிச்சீங் பவுடர் தூவுதல், கிருமி நாசினி தெளித்தனர், வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கிராம எல்லை பகுதியில் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story