ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்


ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2021 11:08 PM IST (Updated: 17 Jun 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம் :

 ஒட்டன்சத்திரம் அருகே வெரியப்பூர் ஊராட்சியில் மூனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்வதற்கு பொதுப்பாதை இருந்தது. அந்த பாதையை பல ஆண்டுகளாக அக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். 

இந்தநிலையில் மெயின்ரோட்டின் அருகே இருந்த குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் தடுத்ததோடு பொதுப்பாதையை முட்செடிகளால் அடைத்து ஆக்கிரமித்து செய்தாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து ஊராட்சி தலைவர் பெரியசாமி, அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையில் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து தாமாகவே கலைந்து சென்றனர். 

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story