கொரோனாவை வென்ற 94 வயது முதியவர்


கொரோனாவை வென்ற 94 வயது முதியவர்
x
தினத்தந்தி 17 Jun 2021 11:09 PM IST (Updated: 17 Jun 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து 94 வயது முதியவர் மீண்டார்.

திருப்பத்தூர், 
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கதிரசே நாச்சியப்பன். 94 வயதான இவருக்கு சமீபத்தில் உறவினரின் துக்க நிகழ்விற்கு சென்று வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் இவருக்கு ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அதன்படி வீட்டில் தனிமையில் இருந்த இவர் தற்போது முழுமையாக குணமடைந்து கொரோனாவை வென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- 1929-ம் ஆண்டு பிறந்த நான், இளமை காலங்களில் வடக்கு வியட்நாமில் வட்டித்தொழில் செய்து வந்ததாகவும், அப்போதில் இருந்தே உடற்பயிற்சி, யோகா, தியானம், ஆசனங்கள் ஆகியவற்றை தினசரி கடைபிடித்து வந்ததாகவும் இன்றளவும் சைவம் மட்டுமே உண்பதாகவும், மேலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து வருவதாகவும் கூறினார். மேலும் 94 வயதிலும் வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிர் செய்து வருவதாகவும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி நாச்சம்மை காலமாகி விட்டதாகவும், தனக்கு 3 மகன்கள், 3 மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளும் இருப்பதாக கூறினார்.

Next Story