அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
திருநாவலூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தாா்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அ.ஜெ.பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை திருநாவலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவரது மறைவையொட்டி அரசூரில் வியாபாரிகள் அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று கடையடைத்தனர். மேலும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜே.பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த பன்னீர்செல்வத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story