மோகனூர் அருகே பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
மோகனூர் அருகே பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மோகனூர்,
மோகனூர் அருகே உள்ள என்.புதுப்பட்டி ஊராட்சி ராமுடையானூரை சேர்ந்தவர் முருகையா (வயது 55). இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தினகரனுக்கும், அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் லாரி டிரைவரான கார்த்திகேயன் (29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று தினகரன் வீட்டிற்கு வந்த கார்த்திகேயன், முருகையா விடம் எங்கே உனது மகன்? என்று தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. ஏன் இவ்வாறு திட்டுகிறாய் என கேட்ட முருகையாவை பலமாக தாக்கினாராம்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகையாவின் வலது கால் தொடையில் கடித்தார். இதில் ரத்தக்காயம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து முருகையா நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்க்டர் அன்பில்ராஜ் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தார்.
Related Tags :
Next Story