குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை புதிதாக பொறுப்பேற்ற துணை சூப்பிரண்டு பேட்டி
பொள்ளாச்சி போலீஸ் சரகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற துணை சூப்பிரண்டு தமிழ்மணி கூறினார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி போலீஸ் சரகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற துணை சூப்பிரண்டு தமிழ்மணி கூறினார்.
துணை சூப்பிரண்டு பொறுப்பேற்பு
பொள்ளாச்சி சரகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிவக்குமார், சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் சரகத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்மணி, பொள்ளாச்சி துணை சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரிடம் துணை சூப்பிரண்டு சிவக்குமார் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக பொறுப்பேற்ற துணை சூப்பிரண்டு தமிழ்மணியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து துணை சூப்பிரண்டு தமிழ்மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டம்- ஒழுங்கு பிரச்சினை
பொள்ளாச்சி சரகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மணல், ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்படுவதாக தெரிவித்தனர். எனவே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story