கடையின் பெயர் பலகை விழுந்து வியாபாரி சாவு


கடையின் பெயர் பலகை விழுந்து வியாபாரி சாவு
x
தினத்தந்தி 18 Jun 2021 12:33 AM IST (Updated: 18 Jun 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே கடையின் பெயர் பலகை விழுந்து வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

காரமடை

காரமடை அருகே கடையின் பெயர் பலகை விழுந்து வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

பெயர் பலகை

கோவை மாவட்டம் காரமடை அருகே கணுவாய்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். 

அதில் ஒரு கடையை முஜீப் என்பவர் வாடகைக்கு எடுத்து ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த கடை யின் முன்பு 500 கிலோ எடை கொண்ட இரும்புக்கம்பி மூலம் ஓட்டலின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை கணுவாய்பாளையத்தில் வாரச்சந்தை நடைபெற்றது. அப்போது ஓட்டலின் பெயர் பலகை வைத்து இருக்கும் இடத்தின் அருகே வியாபாரிகள் பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

வியாபாரி பலி

அப்போது திடீரென்று அந்த ஓட்டலின் பெயர் பலகை சரிந்து கீழே விழுந்தது. இதில் அங்கிருந்த செல்வராஜ் (வயது 50), அவருடைய மனைவி குஞ்சா (வயது 45), பொன்னம்மாள் (வயது 70) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

 அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் செல்வராஜ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story