தர்மபுரி மாவட்ட எல்லையில் 4-வது நாளாக குவிந்த மதுப்பிரியர்கள்
தர்மபுரி மாவட்ட எல்லையில் 4-வது நாளாக குவிந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கி செல்கின்றனர்
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்ட எல்லையில் 4-வது நாளாக மதுப்பிரியர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கி செல் கின்றனர்.
டாஸ்மாக் கடைகள்
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூரை ஒட்டியுள்ள உம்மியம்பட்டி, சனிசந்தை, மானியதஅள்ளி ஆகிய 3 கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த 3 டாஸ்மாக் கடைகளிலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் ஏராளமானவர்கள் மூட்டை, மூட்டையாக மதுவாங்கி செல்கின்றனர்.
அதிகாலையிலேயே...
மாலை 5 மணிக்கு கடை மூடப்பட்டு விடுவதால் மறுநாள் காலையில் அதிகாலையிலேயே கடை திறக்கும் முன்பாக வந்து நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்து கிடக்கின்னர். கடந்த 3 நாட்களாக இந்த டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்கின்றனர். அப்படி இருந்தும் கூட்டம் குறைந்தபாடில்லை.
நேற்று 4-வது நாளாக இந்த 3 கடைகளிலும் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியது. மது வாங்கும் ஆர்வத்தில் மதுபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டதாக தெரிகிறது. இதனால் இந்த 3 டாஸ்மாக் கடைகள் மூலமாக தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இ்ந்த 3 டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று இரு மாவட்ட எல்லைப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story