இன்று மின் வினியோகம் நிறுத்தம்


இன்று மின் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Jun 2021 12:36 AM IST (Updated: 18 Jun 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும் கிராமப் பகுதிகள்

விருதுநகர்,ஜூன்.
விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் எரிச்சநத்தம், நடையனேரி, செங்குன்றாபுரம், சின்னப்ப ரெட்டியபட்டி மற்றும் சமத்துவபுரம் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 
இதேபோன்று பெரியவள்ளிகுளம் துணை மின் நிலையத்தில் மின் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பெரியவள்ளிகுளம், குல்லூர் சந்தை, பாலவனத்தம், மெட்டுக்குண்டு, சென்னல்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 
மேலும் மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வரலொட்டி மற்றும் வில்லிபத்திரி பகுதிகளில் மின் வினியோகம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நிறுத்தப்படும். 
இந்த தகவலை விருதுநகர் மின் பகிர்மான வட்ட நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Next Story