வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் 60 பேருக்கு தடுப்பூசி


வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் 60 பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 18 Jun 2021 12:41 AM IST (Updated: 18 Jun 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் 60 பேருக்கு தடுப்பூசி

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வதம்பச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. 

இதில் வட்டார மருத்துவ அதிகாரி வனிதா உத்தரவின்பேரில், டாக்டர் விஜய், நர்சுகள் சரஸ்வதி, நாகலட்சுமி, ரோசி கொண்ட மருத்துவ குழுவினர் 60 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். 

அதுபோன்று வா.சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 முதல் 44 வயது உடைய பொதுமக்கள 230 பேருக்கு டாக்டர்கள் சுந்தர், கிருஷ்ண பிரபு, நர்சுகள் ஹேமமாலினி, ஜான்ஸி ஆகியோர் தடுப்பூசி போட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் முருக தாஸ், ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர். 

இது வரை 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 3 ஆயிரத்து 750 பேருக்கு தடுப்பூசி போட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story