மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 18 Jun 2021 12:42 AM IST (Updated: 18 Jun 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

களக்காடு:

களக்காடு அருகே மலையடிப்புதூர் நாராயணசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் அய்யப்பன் (வயது 23). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் களக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் மலையடிப்புதூரில் இருந்து வந்து கொண்டிருந்தார். களக்காடு அருகே வந்தபோது எதிரில் வந்த மோட்டார்சைக்கிளும், அய்யப்பன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அய்யப்பன் படுகாயம் அடைந்தார்.

அவர் மீது மோதிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் நிற்காமல் தப்பி சென்று விட்டார். விபத்தில் படுகாயம் அடைந்த அய்யப்பனை உறவினர்கள் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story