பெண் தீக்குளித்து சாவு தற்கொலைக்கு தூண்டியதாக மாமனார்-மாமியார் மீது வழக்கு
வாசுதேவநல்லூர் அருகே தீக்குளித்து பெண் உயிரிழந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மாமனார்-மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே தீக்குளித்து பெண் உயிரிழந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மாமனார்-மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சொத்து பிரச்சினை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே கூடலூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவருடைய மகன் வெள்ளத்துரை (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
முத்துலட்சுமி தனது மாமனார் தங்கப்பாண்டியிடம், குடும்ப சொத்தினை தனது கணவர் அல்லது மகன் பெயருக்கு எழுதி வைக்குமாறு கூறினார். அப்போது சொத்து பற்றி எதுவும் பேசக்கூடாது என்று தங்கபாண்டி கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தீக்குளித்து சாவு
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி முத்துலட்சுமி வீட்டில் திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
மாமனார்-மாமியார் மீது வழக்கு
இதுகுறித்து முத்துலட்சுமியின் தந்தையான சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செய்காத்தூரைச் சேர்ந்த மல்லுத்துரை, வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில், ‘தனது மகளை மாமனார் தங்கப்பாண்டி, மாமியார் வெள்ளத்தாய் ஆகியோர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்றதாகவும், இதனால் வீட்டுக்குள் ஓடிச் சென்று தப்பித்த முத்துலட்சுமி மன உளைச்சலில் தீக்குளித்ததாகவும்’ தெரிவித்து இருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக தங்கப்பாண்டி, வெள்ளத்தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story