மாவட்ட செய்திகள்

கார் மோதிய அதிர்ச்சியில் ஆம்புலன்சில் சென்ற நோயாளி சாவு + "||" + Patient killed in ambulance crash

கார் மோதிய அதிர்ச்சியில் ஆம்புலன்சில் சென்ற நோயாளி சாவு

கார் மோதிய அதிர்ச்சியில் ஆம்புலன்சில் சென்ற நோயாளி சாவு
கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள மரத்தில் ஏறியபோது தவறி விழுந்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். செம்மஞ்சேரி தனியார் கல்லூரி அருகே செல்லும்போது அங்குள்ள வளைவில் திடீரென திரும்பிய கார், ஆம்புலன்ஸ் மீது வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. ஆம்புலன்ஸ் லேசான சேதம் அடைந்தது.ஆனால் ஆம்புலன்ஸ் மீது கார் மோதிய அதிர்ச்சியில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.