அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்


அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2021 4:02 PM IST (Updated: 18 Jun 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


கம்பம்:
கம்பத்தில் அரசு மருத்துவமனை முன்பு முல்லைப்பெரியாறு மருத்துவர்கள் சங்கம் கிளை சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் மகேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் டாக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், 2008-ல் தமிழக அரசு நிறைவேற்றிய மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் டாக்டர்கள் சையது சுல்தான் இப்ராகிம், முருகன், தெய்வமணி உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story