புதுச்சேரியில் 60 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைப்பு


புதுச்சேரியில் 60 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் - தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைப்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 12:13 PM GMT (Updated: 18 Jun 2021 12:13 PM GMT)

புதுச்சேரியில் 60 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.

புதுச்சேரி,

கொரோனா பரவலின் 2-வது அலை தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 3-வது அலை பரவல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கொரோனா தொற்றின் 3-வது பரவலின் போது குழுந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவ்வாறு குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story