தஞ்சையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2021 6:17 PM IST (Updated: 18 Jun 2021 6:17 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தஞ்சாவூர், 

தஞ்சையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி செங்குட்டுவன், ராமசாமி, ராஜா, பிரகதீஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மூடிக்கிடக்கும் பொதுத்துறை தடுப்பூசி உற்பத்தி மையங்களை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story