இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Jun 2021 10:03 PM IST (Updated: 18 Jun 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

இன்று மின்சாரம் நிறுத்தம்

ஆவூர், ஜூன்.19-
மாத்தூர் துணை மின்நிலையத்தின் இன்டஸ்ட்ரியல்-2 உயர் அழுத்த மின் பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெரும் மாத்தூர், குண்டூர்பர்மா காலனி, அயன்புத்தூர், குமாரமங்கலம், வடுகபட்டி, தேவளி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மாத்தூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் விராலிமலை துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கோமங்கலம் உயரழுத்த மின்பாதையில் இன்று (சனிக்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கல்குடி, பூதகுடி, மேப்பூதகுடி, சாரணகுடி, பொருவாய், கோமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படு்ம். இந்த தகவலை விராலிமலை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சங்கர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆதனக்கோட்டை துணை மின் நிலைய பகுதிக்கு உட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி, சோத்துப்பாலை, சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டையன்பட்டி, மங்களத்துபட்டி, வளவம்பட்டி, ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று உதவி மின் செயற் பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story