சத்துவாச்சாரியில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது


சத்துவாச்சாரியில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 10:10 PM IST (Updated: 18 Jun 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

சத்துவாச்சாரியில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

வேலூர்

சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சத்துவாச்சாரியை அடுத்த மூலக்கொல்லை பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை மடக்கி பரிசோதனை செய்தனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. 

விசாரணையில் அவர்கள் வள்ளலார் பாரதிநகர், சத்துவாச்சாரியைச் சேர்ந்த 17, 18 வயதுடையவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 3 பேரை கைது செய்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story