பெற்றோருக்கு பயந்து மாயமான சிறுவன் மீட்பு


பெற்றோருக்கு பயந்து மாயமான சிறுவன் மீட்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 10:25 PM IST (Updated: 18 Jun 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே வீடியோகேம் விளையாட ரூ.25 ஆயிரம் செலுத்தியதால் ெபற்றோருக்கு பயந்து மாயமான சிறுவனை போலீசார் மீட்டனர்.

 திண்டுக்கல் : 
 
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நாடுகண்டானூரை சேர்ந்தவர் பாலன் (வயது 46). இவர், பட்டாசு மற்றும் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வருகிறார். 

அவருடைய மகன் சூர்யபிரகாஷ் (14). இவன், திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவன், தனது தந்தை ஸ்கூட்டருடன் மாயமானான். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரகாசை தேடி வந்தார்.


இந்தநிலையில் தாடிக்கொம்பு பகுதியில் ஸ்கூட்டரில் சுற்றித் திரிந்த சிறுவனை, போலீசார் நேற்று மீட்டனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 


இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சூர்யபிரகாஷ் தனது தாயின் செல்போனை வைத்து ஆன்லைன் வீடியோகேம் விளையாடி வந்துள்ளான். வீடியோகேம் விளையாடுவதற்காக அவ்வப்போது, தனது தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.25 ஆயிரத்தை செலுத்தியுள்ளான். 

இது, தனது பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற அச்சத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஸ்கூட்டருடன் சிறுவன் மாயமாகி இருப்பது தெரியவந்தது என்றார். இதற்கிடையே மீட்கப்பட்ட சூர்யபிரகாசுக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story