தாய், மகனை தாக்கிய 2 பேர் கைது


தாய், மகனை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 10:38 PM IST (Updated: 18 Jun 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

தாய், மகனை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் மோகன்தாஸ் (வயது22). இவரின் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அடித்த பத்திரிக்கையில் மோகன்தாசின் தந்தை முனியசாமியின் பெயரை போடவில்லையாம். இதனால் ஏற்பட்ட தகராறில் மோகன்தாஸ், அவரது தாயை உறவினர்கள் அங்கம்மாள் மற்றும் சிலர் தாக்கினார்களாம்.  படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மோகன்தாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கூர் முத்துக்காமாட்சி மகன் சுரேஷ் (30), பூமிநாதன் மகன் நாகராஜ் (23) ஆகிய 2 பேரையும் கைதுசெய்தனர். அங்கம்மாள் மற்றும் சரவணன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story