மாட்டுத்தொழுவமாக மாறிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்


மாட்டுத்தொழுவமாக மாறிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
x
தினத்தந்தி 18 Jun 2021 10:47 PM IST (Updated: 18 Jun 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

மாட்டுத்தொழுவமாகமாறிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது இப்பகுதி பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

வாணாபுரம்,

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தேவனூர் ஊராட்சி. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் புதிதாக ஊராட்சி மன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டும் தலைவர் ஊராட்சி மன்ற கட்டிடத்தை பயன்படுத்தாமல் இருந்து வருவதால் கட்டிடத்தின் முன் பகுதியில் கால்நடைகளை கட்டி வருகின்றனர்.

இதனால் ஊராட்சிமன்ற அலுவலக பகுதி அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரடியாக சென்று தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்க முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மாட்டுத்தொழுவமாகமாறிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது இப்பகுதி பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

Next Story