ஆபத்தான முறையில் மாவட்ட எல்லையைத்தாண்டும் மதுப் பிரியர்களின் சாகசப்பயணத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆபத்தான முறையில் மாவட்ட எல்லையைத்தாண்டும் மதுப் பிரியர்களின் சாகசப்பயணத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
போடிப்பட்டி
ஆபத்தான முறையில் மாவட்ட எல்லையைத்தாண்டும் மதுப் பிரியர்களின் சாகசப்பயணத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
புதிய வழிகள்
தமிழகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் கடந்த 14-ந்தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில் அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லையை நோக்கி மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். இவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் புதிது புதிதாக வழிகளைக் கண்டுபிடித்து மதுப்பிரியர்கள் சாகசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு சில நாட்கள் கூட பொறுக்க முடியாத மதுப்பிரியர்கள் ஆபத்தான வழிகளில் மாவட்ட எல்லையைக்கடந்து வருகிறார்கள். அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த சாமிநாதபுரத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு செல்வதற்கு அமராவதி ஆற்றை ஆபத்தான முறையில் கடக்கிறார்கள். சோழமாதேவி, மடத்துக்குளம் பகுதிகளிலிருந்து ராஜவாய்க்கால் கரை வழியாக பல கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கிறார்கள்.
ரெயில் தண்டவாளம்
ஒரு சில மதுப்பிரியர்கள் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு ராஜவாய்க்காலைக் கடந்து சாகசம் புரிந்ததையும் காண முடிந்தது. பைபாஸ் சாலைக்காக அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த இடத்திற்கு அருகில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு ஆற்றுக்குள் இறங்கி மறுபுறம் சென்று சரக்கு வாங்கி வருகிறார்கள். ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்ற போது சில மதுப் பிரியர்கள் பரிசல் மூலம் ஆற்றைக் கடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியிலுள்ள வயல்வெளிகளில் வரப்புகளிலும் காலி மதுபாட்டில்கள் குவியத்தொடங்கியுள்ளன. புதுப்புது நபர்களின் வருகையாலும் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தாலும் இந்த பகுதி விவசாயிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மடத்துக்குளத்திலிருந்து ரெயில் தண்டவாளத்தின் வழியாக பல கிலோமீட்டர்கள் நடந்து ஒருசில மதுப்பிரியர்கள் எல்லையைத் தாண்டுகிறார்கள். இதனால் எதிர்பாராத தருணத்தில் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமூக இடைவெளி இல்லை
மேலும் சாமிநாதபுரம் டாஸ்மாக் மதுக்கடையில் சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டு குடையுடன் வரும் நபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான நபர்கள் குடையைச் சுருட்டி கைகளிலே வைத்துக்கொண்டு சமூக இடைவெளியில்லாமல் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு நிற்கிறார்கள். அத்துடன் பலருடைய முககவசம் தாடையில் தான் இருக்கிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எல்லை தாண்டும் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் பல குடும்பங்களின் நிம்மதி பறிபோனதுடன் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரின் நிம்மதியும் பறி போனது என்றுதான் சொல்ல வேண்டும்.
Related Tags :
Next Story