கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு
அரக்கோணம்
அரக்கோணம் - காஞ்சீபுரம் மேம்பால சாலை அருகில் அரக்கோணம் கிருபில்ஸ் பேட்டையைச் சார்ந்த ஆனந்த் என்பவர் ஆட்டோ ஓட்டி வந்தார். அப்போது இயற்கை உபாதையை கழிக்க சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றபோது, அங்கு நின்றிருந்த ஒருவர், ஆனந்தை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
அவர் பணம் தர மறுத்தபோது, நான் யார் என்று தெரிந்தும் பணம் தர மறுக்கிறாயா? என கேட்டு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சட்டைப்பையில் இருந்த ரூ.800-யை எடுத்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அவர்கள், அவரை பிடிக்க முயன்றபோது, கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றார்.
இது குறித்து ஆட்டோ டிரைவர் ஆனந்த் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அவர் கூறிய அங்க அடையாளத்தை வைத்து இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தினார்.
ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்தது அரக்கோணம் பழனிபேட்டையைச் சேர்ந்த திருமாறன் (23) என தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்ததாக ஒப்புகொண்டார். அவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story