இன்று மின் தடை
சேத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
சேத்தூர் உப மின் நிலையத்தில் உள்ள உயர்அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சேத்தூர், பசும்பொன் நகர், ஆதிதிராவிடர் காலனி, காமராஜர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. அதேபோல கிழக்குப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை சிட்கோ காலனி, கற்பகாம்பாள் மில், செந்தட்டியாபுரம், கிழவிகுளம், நல்லமநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், முத்தாநதி, தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மாலதி கூறினார். அதேபோல அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை அருப்புக்கோட்டை நகர், தேவா டெக்ஸ் காலனி, சிங்காரத்தோப்பு, ெரயில்வே பீடர் ரோடு, மீனாம்பிகை நகர், கஞ்சநாயக்கன்பட்டி, தேவங்கர் கலைக்கல்லூரி, காந்திநகர், திருச்சுழி ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் மனோகரன் கூறினார்.
Related Tags :
Next Story