நாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை


நாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2021 12:48 AM IST (Updated: 19 Jun 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

நாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கல்லல்,

கல்லல் அருகே உள்ள நாட்டரசன்கோட்டையில் இருந்து சொக்கநாதபுரம் வரை நபார்டு திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சொக்கநாதபுரத்தில் ஒரு சறுக்கு பாலமும் வெள்ளஞ்சம்பட்டியில் 50 மீட்டர் நீளத்துக்கு சாலையும், கொட்டாம்பட்டியில் 50 மீட்டர் சாலையும், பாகனேரியில் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையும் என ஆங்காங்கே போடப்பட்டு உள்ளது. ஆங்காங்கே சாலை குண்டும்-குழியும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
இதுகுறித்து அம்மன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி மகேந்திரன் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டாக சாலை பணி நடந்து வருகிறது.எனது பஞ்சாயத்துக்குட்பட்ட 2 இடங்களில் பணிகள் பாதியிலேயே கிடக்கிறது, எனவே சாலையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

Next Story