ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி சாவு


ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 19 Jun 2021 12:51 AM IST (Updated: 19 Jun 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

சாத்தூர், 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காமாட்சி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பொன்னுப்பாண்டி. கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள். 2 மகள்கள். 
இந்தநிலையில் இவரது மகன்கள் அழகன் (வயது13), தினேஷ்குமார் (8), திலீபன் (6) ஆகிய 3 பேரும் சாத்தூர் வைப்பாற்றில் தடுப்பணை அருகே தேங்கிய நீரில் குளிக்க நேற்று சென்றிருந்தனர். 
3 பேரும் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திலீபன் திடீரென நீரில் மூழ்கினான். உடனே அழகன், தினேஷ்குமார் ஆகியோர் கூச்சலிட்டனர். அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
ஆற்றில் இறங்கி சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் திலீபன் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திலீபன் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திலீபனின் தாயார் சரசுவதி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Tags :
Next Story