முககவசம் அணியாத 424 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 424 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 Jun 2021 1:30 AM IST (Updated: 19 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 424 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 424 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Next Story