துணை மின் நிலைய பகுதிகளில் இன்று முதல் மின் நிறுத்தம்


துணை மின் நிலைய பகுதிகளில் இன்று முதல் மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Jun 2021 2:45 AM IST (Updated: 19 Jun 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், பேரளி, எசனை, மங்கூன் ஆகிய துணை மின்நிலையங்களில் அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்:

பராமரிப்பு பணிகள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பெரம்பலூர் உப கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், பேரளி துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரையிலும், எசனை துணை மின்நிலையத்தில் இன்று, நாளை மறுநாள் (திங்கட்கிழமை), 24-ந் தேதியும், மங்கூன் துணை மின்நிலையத்தில் இன்று, நாளை மறுநாள் மற்றும் 23, 24-ந் தேதிகளிலும் அவசர கால சிறப்பு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது.
இதனால் பெரம்பலூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான பெரம்பலூர் இந்திரா நகர், சமத்துவபுரம், வடக்கு மாதவி, காவலர் குடியிருப்பு, எளம்பலூர், செங்குணம், சென்னை ரோடு ஆகிய பகுதிகளிலும், பேரளி துணை மின்நிலையத்தில் கல்பாடி, க.எறையூர், நெடுவாசல் ஆகிய பகுதிகளிலும், எசனை துணை மின்நிலையத்தில் சோமண்டாபுதூர், பாரதி நகர், கோனோரிபாளையம் ஆகிய பகுதிகளிலும், மங்கூன் துணை மின்நிலையத்தில் கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளிலும் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது.
பேரளி, எளம்பலூர், மங்கூன் பகுதிகளில்...
இதேபோல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பேரளி, ஒதியம், எளம்பலூர், வடக்கு மாதவி ரோடு, சிட்கோ, முத்துலட்சுமி நகர், சித்தர் கோவில், ரோஸ் நகர், உப்போடை, தீரன் நகர், அகரம், கவுல்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், அரியலூர் ரோடு, காவலர் குடியிருப்பு, குடிசை மாற்று வாரியம், ஆலம்பாடி, சொக்கநாதபுரம், செஞ்சேரி, கீழக்கணவாய், மேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, லாடபுரம், மேலப்புலியூர், புது ஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, குரும்பலூர், பாளையம், மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், விராலிப்பட்டி, மாவிலங்கை, கண்ணப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது.
சித்தளி, களரம்பட்டி, எசனை பகுதிகளில்...
இதேபோல் வருகிற 22-ந்தேதி பேரளி, சித்திளி, பீல்வாடி, அசூர், சிறுகுடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, அருமடல் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது. 23-ந்தேதி களரம்பட்டி, அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது. 24-ந்தேதி எசனை, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், விராலிப்பட்டி, மாவிலங்கை, கண்ணப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் இருக்காது. 28-ந் தேதி களரம்பட்டி, அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story