சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த பொதுமக்கள்


சிறப்பு மையங்களில்  தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Jun 2021 4:29 AM IST (Updated: 19 Jun 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் தொடங்கியதால் சிறப்பு மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

தர்மபுரி:
தடுப்பூசி போடும் பணி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 56 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதால் தடுப்பூசி போட்டு கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனிடையில் தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.
மீண்டும் தொடங்கியது
இதையடுத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி சிறப்பு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு கலை கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 
இந்த மையத்தில் நேற்று காலையிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் திரண்டனர். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தடுப்பூசி சிறப்பு மையங்களில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story